/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உள்ளாட்சித்தேர்தலில் கேரள இதயத்தை கைப்பற்றியது; பா.ஜ., பொன் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
/
உள்ளாட்சித்தேர்தலில் கேரள இதயத்தை கைப்பற்றியது; பா.ஜ., பொன் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
உள்ளாட்சித்தேர்தலில் கேரள இதயத்தை கைப்பற்றியது; பா.ஜ., பொன் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
உள்ளாட்சித்தேர்தலில் கேரள இதயத்தை கைப்பற்றியது; பா.ஜ., பொன் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
ADDED : டிச 16, 2025 06:54 AM
பழநி: ''கேரள உள்ளாட்சி தேர்தலில் அதன் இதயத்தை பா.ஜ., கட்சியை கைப்பற்றியுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பழநி பா.ஜ., சார்பில் சட்டசபை தொகுதி எஸ்.ஐ.ஆர்., பயிலரங்கம் நடந்தது. முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின் அவர் கூறியதாவது: 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் அரசியல் திருப்புமுனையாக அமையும். தற்போது தி.மு.க., அரசு ஓட்டு பெறும் நோக்கத்தில் ஹஜ் பயணிகளுக்கு கட்டடம், லேப்டாப் வழங்குகின்றனர். இதனை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான்கு ஆண்டுகளாக ஏன் இதை செய்யவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், இலவச வீடு போன்றவற்றையும் அறிவிக்கலாம். நேர்மையற்றவர்களின் வாக்குறுதிகள் என்றுமே தமிழரை உயர்த்தாது. தமிழகத்தை தாழ்த்தும்.
அன்றைய காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் பா.ஜ., கொடிகட்ட ஒரு அடி இடம் தர முடியாது என கூறினார். தற்போது எங்கு பார்த்தாலும் பா.ஜ., கொடி பறக்கிறது. தமிழகத்தை நாசப்படுத்தக்கூடிய தி.மு.க.,வை அகற்ற விரும்பும் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் வேறு கட்சிக்கு மாறியிருப்பது சேராத இடம் தனிலே சேர வேண்டாம் என்பது போல் உள்ளது. கேரள மாநிலத்தின் இதயத்தை பா.ஜ., கட்சி கைப்பற்றி உள்ளது. கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் பா.ஜ., கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. கேரளத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையக்கூடும் என்றார்.

