/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர் பிரச்னை: விவசாயிகள் போராட்டம்
/
நீர் பிரச்னை: விவசாயிகள் போராட்டம்
ADDED : டிச 16, 2025 06:54 AM
பழநி: வரதமாநதியிலிருந்து அனுமதியின்றி பட்டிகுளத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குளத்து பாசன விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.
பழநி வரதமாநதி அணை 18 குளங்களுக்கு தண்ணீர் பாசன பகுதிகளாக உள்ளது. ஆனால் அதிகாரிகள் பாரபட்சமாக சில குளங்களுக்கு மட்டும் தண்ணீர் வினியோகம் செய்து வருவதாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வரதமா நதி பாசனத்திற்கு உட்படாத பட்டிகுளத்திற்கு முறைகேடாக அப்பகுதியினர் தண்ணீர் மடையை திருப்பி எடுத்துச் சென்றதாக கூறி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விவசாயிகள் அனுமதியின்றி வேறு பகுதிக்கு தண்ணீர் வழங்கக்கூடாது எனவும் கண்டனம் தெரிவித்து நேற்று நீர்வளத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்

