/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடன்பெற்று தருவதாக ரூ.12 லட்சம் மோசடி- சுயஉதவிக்குழு பெண்கள் புலம்பல்
/
கடன்பெற்று தருவதாக ரூ.12 லட்சம் மோசடி- சுயஉதவிக்குழு பெண்கள் புலம்பல்
கடன்பெற்று தருவதாக ரூ.12 லட்சம் மோசடி- சுயஉதவிக்குழு பெண்கள் புலம்பல்
கடன்பெற்று தருவதாக ரூ.12 லட்சம் மோசடி- சுயஉதவிக்குழு பெண்கள் புலம்பல்
ADDED : டிச 16, 2025 06:55 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், மகளிர் சுய உதவிக்குழு கடன்பெற்றுத் தருவதாகக்கூறி 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.12லட்சம் மோசடி செய்துள்ளதாக, கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.
திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோட்டை சேர்ந்த பெண்கள், கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் வங்கிக்கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, பெண் மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தனர். அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதி பெண் தலைவியாக செயல்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவில் நாங்கள் உறுப்பினர்களாக சேர்ந்தோம். ஒவ்வொருவருக்கும் 2 வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாக கூறினார். அவர் கேட்டபடி, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தோம்.
பின்னர் வங்கிக் கடன் வந்துவிட்டது, அந்த பணத்தை எடுத்து தருவதற்கு ஏ.டி.எம்., கார்டு, ரகசிய எண் வேண்டும் எனக்கூறி அவர் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டார். ஆனால் கடன் தொகையை தராமல் ஏமாற்றிவிட்டார். இவ்வாறு பத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளார். நியாயம் கேட்க சென்றபோது, அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். போலீசில் புகார் அளித்துள்ளோம். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் கடனுக்கான தவணை தொகையை செலுத்தும்படி வற்புறுத்துகின்றனர். செலுத்தாவிட்டால் ஜப்தி செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

