/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'பவன்கல்யாண் தமிழகம் வந்தால் கருப்புக்கொடி'
/
'பவன்கல்யாண் தமிழகம் வந்தால் கருப்புக்கொடி'
ADDED : மே 17, 2025 06:49 AM
திண்டுக்கல் : ''ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்'' என ஹிந்து மக்கள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலர் தர்மா கூறினார்.
நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படத்தின் பாடல் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக புகார் எழுந்தது. தயாரிப்பாளர் மீது திருப்பதி போலீசாரிடம் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சியினர் சந்தானத்திற்கு ஆதரவாக பெருமாள் வேடமிட்டு திரையரங்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலர் தர்மா கூறியதாவது: இப்படத்தில் வரும் பாடலில் ஹிந்துக்களை புண்படுத்தும் விதமாகவோ, கொச்சைப்படுத்தும் வகையிலோ இல்லை. இந்த பாடலுக்காக தமிழக பக்தர்களை திருப்பதியில் அனுமதிக்க மாட்டோம் என்று பவன்கல்யாண் மிரட்டல் விடுத்துள்ளார். அவர் தமிழகம் வந்தால் நாங்கள் கருப்புக்கொடி காட்டுவோம் என்றார்.