/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீசன் தொழிலாக கருப்பட்டி; உற்பத்தியில் சுறுசுறு
/
சீசன் தொழிலாக கருப்பட்டி; உற்பத்தியில் சுறுசுறு
ADDED : மே 25, 2025 04:47 AM

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை, ஆர்.கோம்பை ஊராட்சி பகுதியில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கிகருப்பட்டி காய்ச்சும்சீசன்தொழில் சூடு பிடித்துள்ளது.
ஆர்.கோம்பை ஊராட்சிமலையடிவரப் பகுதிகளில் உள்ள தோப்பூர், கரட்டுச்சாலையூர், கரட்டூர், சின்னழகுநாயக்கனுார், ரெட்டியபட்டி தாசமநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 20 ஆயிரத்திற்குமேற்பட்ட பனை மரங்கள் அடர்ந்த காடுகளாய், கண்ணுக்கெட்டியதுாரம் வரைகாட்சி அளிக்கின்றன.
குலதொழில்
இப் பகுதிகளில் பனைதொழில்செய்வதற்கென்றே600க்குமேற்பட்ட குடும்பத்தினர் காலம் காலமாய் வசிக்கின்றனர். காலம், காட்சிகள்மாறினாலும் தங்கள் குலதொழிலை விட்டு விடாமல்எண்ணற்றோர் அதிகாலையிலேஎழுந்து பனை மரங்களில் ஏறிசுண்ணாம்பு தடவிய பானைகளை கட்டி விட்டு, மறுநாள் காலையில்வரிசையாக மரங்களில் ஏறிதாங்கள் கொண்டு செல்லும்குடுக்கைகளில் பதநீர்பிடித்து வருவதுஎனதொழிலாளர்கள் தங்களது தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
4 மாதசீசன்
கொண்டுவரப்பட்ட பதநீரைவிட்டுபெண்கள் பக்குவமாய் காச்சிதொட்டாங்குச்சிகளில் ஊற்றிகருப்பட்டிதயார் செய்கின்றனர்.
கருப்பட்டிதற்போது கிலோ ரூ.250 என்ற விலையில் அதாவது 10 கிலோ பெட்டி ரூ.2500 எனஅப்பகுதி வியாபாரிகள்வாங்கி செல்கின்றனர்.
ஆண்டுக்கு4 மாதங்கள் மட்டுமேசீசன் உள்ளநிலையில், இதிலும் கள்இறக்குவதாக கூறி சிலர் பிரச்னையை கிளப்புவதால் போலீசாரின் தொல்லை கூடுதலாக உள்ளதாக குமுறுகின்றனர்தொழிலாளர்கள்.
ஆட்கள் பற்றாக்குறை
கோவிலுார்கரட்டு சாலையூர்செல்லம்மாள் கூறியதாவது:ஆண்டுக்குநான்கு மாதங்கள் மட்டுமேபதநீர் இறக்குவது, கருப்பட்டி காய்ச்சுவது என தொழில் வேகம் பிடிக்கும். மற்ற காலங்களில் தென்னை மரம்ஏறுவது ,ஆடு மாடுகளை மேய்ப்பது என பலர் மாற்றுத் தொழிலுக்கு மாறிவிடுவர்.தற்போது பெரும்பாலான இளைஞர்கள் இந்த தொழிலை விட்டுமாற்றுதொழிலுக்கு சென்று விட்டனர். வரும் காலங்களில் இந்த தொழிலுக்கும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.போலீசாரின் தொல்லை இன்றி தொழிலாளர்கள் சுதந்திரமாகதொழிலில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என்றார்.