/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டை முட்களால் அடைத்து நுாதன போராட்டம்
/
ரோட்டை முட்களால் அடைத்து நுாதன போராட்டம்
ADDED : நவ 04, 2024 07:06 AM

வடமதுரை : அய்யலுார் கிணத்துபட்டி அருகில் ஒரு கி.மீ., தொலைவில் செங்களத்துபட்டி கிராமம் உள்ளது. இங்கு இதுவரை அதிகாரப்பூர்வமான ரோடு வசதி இல்லாமல் தனியார் நிலங்களின் வழியே மக்கள் செல்கின்றனர்.
இக்கிராமத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்தனர். பாலத்தோட்டத்திலிருந்து கிணத்துபட்டி வழியே பொட்டிநாயக்கன்பட்டி நான்கு வழிச்சாலையில் சேரும் ரோடு செங்களத்துபட்டி கிராமத்தினருக்கு சொந்த இடம் வழியே பல மீட்டர் துாரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் கிராமத்திற்கு வழியே இல்லாத நிலையில் தங்களது நிலத்தின் வழியே எப்படி வேறொரு கிராமத்திற்கு ரோடு அமைக்கலாம் எனக்கூறி நேற்று காலை சிலர் முள்மரங்களை வெட்டி ரோட்டின் குறுக்கே போட்டு பாதையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சில மணி நேரம் இவ்வழியே செல்ல வேண்டியவர்கள் சுற்றுப்பாதையில் சென்றனர். வடமதுரை போலீசாரும்,வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தவே அடைப்பு அகற்றப்பட்டது.