ADDED : மார் 29, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி , என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி, நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து ரத்ததான சிறப்பு முகாம் நடத்தியது.
கல்லுாரி முதல்வர் கார்த்திகை பாண்டியன், அறிவியல் கல்லுாரி முதல்வர் தேவி தலைமை வகித்தனர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஆ.சிவக்குமார், சுந்தரராஜன்,கார்த்திகா முன்னிலை வகித்தனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி முதுநிலை மேலாளர் ரவி, மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர்.