/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராவுத்தம்பட்டியில் ரத்ததான முகாம்
/
ராவுத்தம்பட்டியில் ரத்ததான முகாம்
ADDED : டிச 25, 2025 06:28 AM
நத்தம்: நத்தம் அருகே ராவுத்தம்பட்டியில் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சார்பில் டிச.18 முதல் 24 வரை துாய்மைக்கான இளைஞர்கள் எனும் தலைப்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். இதை தொடர்ந்து ரத்ததான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உலுப்பகுடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை ஓய்வு ஆலோசகர் சுப்பிரமணியன் பேசினார்.
100க்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்ராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன் செய்திருந்தார்.

