நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: குளத்துாரில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.வி.எஸ்.,கல்லுாரி இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.
வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர் மைதிலி, முதல்வர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் அரசு இரத்த வங்கி டாக்டர் சரண்யா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், ஆய்வாளர் தங்கராஜ், கல்லூரி நிர்வாக அலுவலர் உமாபிரியன், சி.இ.ஓ., வேணுகோபால் முருகதாஸ், துறைத் தலைவர் கண்ணன் பங்கேற்றனர்.

