sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மருத்துவ காப்பீட்டு அட்டை முடக்கம்; சிறுநீரக பாதிப்பு சிகிச்சை பெற முடியாததால் தர்ணா

/

 மருத்துவ காப்பீட்டு அட்டை முடக்கம்; சிறுநீரக பாதிப்பு சிகிச்சை பெற முடியாததால் தர்ணா

 மருத்துவ காப்பீட்டு அட்டை முடக்கம்; சிறுநீரக பாதிப்பு சிகிச்சை பெற முடியாததால் தர்ணா

 மருத்துவ காப்பீட்டு அட்டை முடக்கம்; சிறுநீரக பாதிப்பு சிகிச்சை பெற முடியாததால் தர்ணா


ADDED : பிப் 10, 2026 06:35 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: குஜிலியம்பாறை ஒன்றியத்தை சேர்ந்த தம்பதியினர் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை முடக்கிவிட்டதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டு குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மை நலத்துறை அலுவலர் சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்குமார், கலால்துறை உதவி ஆணையர் பிரபு முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். 297 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாக பயிற்றுநர்கள் வழங்கிய மனுவில், மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் 252 பணியிடங்கள் உள்ளன. 164 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.

நா ங்கள் எமிஸ், UDISE பணிகளை கவனித்து வருவதுடன் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளுக்கான டிஜிட்டல் போர்டு, மின் சாதன பராமரிப்புப் பணிகளையும் பார்த்து வருகிறோம்.

எங்களுக்கு மாதந்தோறும் ரூ.11,450 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட பிடித்தம் போக ரூ.9,700 மட்டுமே பெறுகிறோம். ஒரு பயிற்றுநர் 10 முதல் 15 பள்ளிகளின் பணிகளை கவனித்து வருவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக வழங்க கேட்டுள்ளனர் .

தெத்துப் பட்டி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் வழங்கிய மனுவில், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கோம்பை நீர்த்தேக்கம் உள்ளது.

இதற்கு வரத்துக் கால்வாய் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வனத்துறை பகுதிகளில் இருந்து நிரந்தர நீர்வரத்து கிடைத்தது. தற்போது தனிநபர் அனுமதி இன்றி தடுப்பணை கட்டி உள்ளார். வனத்துறை அதிகாரிகள், கலெக்டர் ஆய்வு செய்து தடுப்பணையை அகற்றி தெத்துப்பட்டி குடிநீர் ஆதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

தர்ணா குஜிலியம்பாறை பாளையம் முஸ்லிம் தெரு கார் டிரைவர் குமார். இவர் தனது மனைவி சுமதி, மைத்துனர்களுடன் கூட்டரங்கம் முன் தர்ணாவில் ஈடுபட்டு மனு அளித்தனர். மனுவில், சிறுநீரக தொற்று நோய் தாக்கியதால் திருச்சியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன்.

எனது பெயர் என தாயின் பெயரில் உள்ள ரேஷன் அட்டையில் இருந்து பிரித்தெடுத்து மனைவி பெயர், என்னுடைய பெயர் சேர்த்து ரேஷன் அட்டை பெற்றேன். இதனால் தொடர்ந்து டயாலிஸ் மருத்துவ அட்டை பயன்படுத்த மறுப்பு தெரிவித்த னர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டோம், அவர்கள் வருமான, ஜி.எஸ்.டி., வரி செலுத்துபவர்கள் என காரணங்களை காட்டி முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டையை முடக்கிவிட்டனர்.

இதனால் சிகிச்சை எடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us