ADDED : ஆக 17, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வெற்றிலை நகர் அரிமா சங்கம், பசுமை வதிலை இயக்கம், கோர் உடற்பயிற்சி கூடம், காந்திமதி ஸ்டோர் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.
அரிமா சங்கத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் திருமணி, சுப்பிரமணி, மனோதீபன் முன்னிலை வகித்தனர். பசுமை வதிலை இயக்கத்தினர் வரவேற்றனர். திண்டுக்கல் ரத்த வங்கி நிறுவனத்தினர் ரத்த சேகரிப்பு முகாமை ஒருங்கிணைத்தனர். உடற்பயிற்சி கூட வீரர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ரத்தம் செலுத்தினர். ரத்தம் செலுத்தியவர்களுக்கு பழச்சாரு, பிஸ்கட் வழங்கப்பட்டன.
