ADDED : ஆக 17, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலகுண்டு காந்திநகர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் தலைவர் திருப்பதி தலைமையில் நடந்தது.
செயலாளர் சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் காந்திநகரில் இருந்து மெயின் ரோட்டிற்கு செல்ல மாற்று ரோடு அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி வீணாகி வருகிறது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் இந்த ரோட்டில் வர முடியவில்லை. எனவே காந்தி நகருக்கு மாற்று ரோடு அமைக்க வேண்டும். வத்தலக்குண்டு பேரூராட்சியில் வீதிகளில் குழாய்களுக்கு தோண்டப்பட்ட ரோடுகள் பல மாதங்களாக சரி செய்யப்படவில்லை. இதனை பேரூராட்சி நிர்வாகம் விரைவுப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொருளாளர் ராஜயோக்கியம் தீர்மானங்களை வாசித்தார். எழுத்தாளர் வதிலை பிரபா நன்றி கூறினார்.
