ADDED : பிப் 04, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தமிழ்நாடு அனைத்து நகராட்சி மாநகராட்சிகளில் பணி புரியும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் ஆல்பர்ட் தலைமை வகித்தார். பொதுச்செயலர் செந்தில் ராம்குமார், பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தனர்.
மாநிலக் செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜ் வரவேற்றார். சுகாதார அலுவலர் ராஜரத்தினம் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 12 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் மாநில தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.