/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அருவியில் இறந்த மாணவர்கள் உடல் மீட்பு
/
அருவியில் இறந்த மாணவர்கள் உடல் மீட்பு
ADDED : ஜன 18, 2024 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் குளிக்க சென்ற மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த நசீர் 21, ஆனந்தகிரியை சேர்ந்த கோகுலகண்ணன் 21. கோவை தனியார் கல்லுாரியில் படித்தனர். பொங்கல் விடுமுறைக்கு கொடைக்கானல் வந்த இருவரும் நண்பர்களுடன் ஐந்து வீடு அருவிக்கு சென்றனர்.
ஆபத்தான பகுதியில் குளிக்க சென்றவர்கள் மாயமாகினர். தீயணைப்புத் துறையினர் தேடினர். நேற்று காலை இருவரது உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.