/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்தக திருவிழா போட்டி தேதி மாற்றம்
/
புத்தக திருவிழா போட்டி தேதி மாற்றம்
ADDED : செப் 07, 2024 07:12 AM
திண்டுக்கல்,செப்.7 -திண்டுக்கல் இலக்கிய கள போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சரவணன் அறிக்கை: திண்டுக்கல் புத்தகத் திருவிழா 2024 அக்.10 முதல் அக்20 வரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்க உள்ளது.
மாணவர்களுக்கு பல்வேறு திறனறிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு ,ஓவியப் போட்டிகள் தமிழ்,ஆங்கில வழிகளில் திண்டுக்கல், நத்தம், வேடசந்துார், பழநி,வத்தலக்குண்டு என 5 மையங்களில் இன்று நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்போட்டிகள் அனைத்தும் செப்.9 ல் 5 மையங்களில் நடக்கும். போட்டி தலைப்புகள் ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களில் பெறுபவர்களுக்கு பரிசு , முதலிடம் பெறுபவர்களுக்கு கலைப்பயணம் உண்டு எனக்குறிப்பிட்டுள்ளார்.