ADDED : மார் 16, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு;கோவிலுார் அருகே பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி.
கே.ராமநாதபுரம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு நடந்து செல்லும் இம்மாணவியை தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் விலை உயர்ந்த டூவீலரில் தன்னுடன் பயணித்து வீட்டுக்கு செல்லும்படி தொடர்ந்து மிரட்டி வந்தார். நேற்று முன்தினமும் மிரட்டவே பயந்து போன சிறுமி பெற்றோருக்கு தகவல் தந்தார் . பெற்றோர் புகாரில் எரியோடு போலீசார் சிறுவனை கைது செய்தனர்.