/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி சிறுவன் பலி
/
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி சிறுவன் பலி
ADDED : ஆக 18, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி அந்தோணியார் சர்ச் தெருவைச் சேர்ந்த சதீஷ் 29, கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரிதா. இவர்களது 5 வயதுமகன் லக்ஷன். இவர்களின் வீட்டிலிருந்து சில அடி தூரத்தில் சர்ச் உள்ளது.
அங்கு சிறுவன் லக்ஷன் நேற்றுக்காலை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 4.50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். யாரும் கவனிக்காததால் பரிதாபமாக சிறுவன் இறந்தான். எஸ்.ஐ., சித்திக் மற்றும் போலீசார் சிறுவன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.