ADDED : அக் 25, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம்:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திரிஜி.
தனது குடும்பத்துடன் கள்ளிமந்தையம் அம்மாபட்டியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்கின்றனர். இவருடைய மகன் அன்கேஷ் 6, இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறார். நேற்று (அக்.,24) மாலை, மழை பெய்து கொண்டிருந்த போது அதே பகுதியில் இருந்த குட்டை அருகே சென்ற போது தேங்கி இருந்த தண்ணீரில் தடுமாறி விழுந்து மூழ்கி இறந்தார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
