/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் விபத்தில் சிறுவர்கள் பலி
/
டூவீலர் விபத்தில் சிறுவர்கள் பலி
ADDED : பிப் 17, 2025 01:07 AM
பாலசமுத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் பாலாறு டேம் பகுதியில் டூவீலரில் சென்ற சிறுவர்கள் விபத்தில் சிக்கி இறந்தனர்.
பழநி பாலசமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்த அன்பரசு மகன் தனுஷ் 18, சூரி மகன் புவனேஷ் 17, இருவரும் நண்பரின் டூவீலரை வாங்கிக் கொண்டு(ெஹல்மெட் அணியவில்லை) நேற்று முன்தினம் இரவு பாலாறு பொருந்தலாறு அணைக்கு சென்றனர். ஓட்டுனர் உரிமமும் இல்லை. அதி வேகமாக சென்ற சிறுவர்கள் வளைவில் நிலை தடுமாறி விழுந்தனர். இதில் காயமடைந்த சிறுவர்கள் குறித்து இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் காலதாமதமாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் இறந்தனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.