/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED : ஆக 06, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : மல்லனம்பட்டி அழகாபுரி மகாலட்சுமி கோயில் ஆடிப்பெருக்கு திருவிழா நடந்தது.
நள்ளிரவில் நடந்த இந்த திருவிழாவில் ஊர் கிணற்றின் அருகே கரகம் ஜோடித்து அபிஷேகங்கள் நடந்தது.
மேளம் முழங்க கோவிந்தா கோஷத்துடன் மடியில் தேங்காய்களை கட்டிக் கொண்டு வந்த பூஜாரி பக்தரின் தலையில் தேங்காய் உடைத்தார்.
இதை தொடர்ந்து மகாலட்சுமி அம்மன் சிலை மின் அலங்கார தேரில் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.