/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
/
டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
ADDED : நவ 26, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது.
வெங்கடாஸ்திரிகோட்டை பிரிவில் வசிப்பவர் கவின் 28. விருவீடு கால்நடை மருத்துவராக உள்ளார். நேற்று முன்தினம் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று விட்டு நேற்று பகலில் வீடு திரும்பினார்.
கதவை உடைந்து உள்புகுந்த கொள்ளையர்கள் இரண்டு பவுன் நகை, ரூ. 45 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

