தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நான்கு வழிச்சாலை பணியில் பாலம் கட்டுமானம் தீவிரம்

நான்கு வழிச்சாலை பணியில் பாலம் கட்டுமானம் தீவிரம்

நான்கு வழிச்சாலை பணியில் பாலம் கட்டுமானம் தீவிரம்


UPDATED : ஜூன் 07, 2026 07:22 PM

ADDED : ஜூன் 07, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 07:22 PM ADDED : ஜூன் 07, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:அம்மைநாயக்கனுார் - வத்தலக்குண்டு 14 கி.மீ., ரோடு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது. முதல் கட்டமாக அம்மையநாயக்கனுாரில் இருந்து அரசு பெண்கள் கல்லுாரி வரை 8 கி.மீ., ரோடும் இரண்டாம் கட்டமாக அரசு பெண்கள் கல்லுாரியில் இருந்து வத்தலக்குண்டு வரை 6 கி.மீ., ரோடும் நான்கு வழிச்சாலை ஆகிறது. தற்போது 8 மீ., அகலம் உள்ள ரோடு 15 மீட்டராக தரம் உயர்கிறது. இதற்காக ரோட்டின் இருபுறமும் இருந்த பழமையான மரங்கள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து வெங்கடாஸ்திரிகோட்டை, ஐ.டி. ஐ., உள்ளிட்ட நான்கு பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையாக தரம் உயர்வதன் மூலம் கொடைக்கானல் செல்லும் தென்மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து இடையூறு இருக்காது என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த ரோட்டில் நிலக்கோட்டை நகரை கடப்பதற்கு மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us