/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீடியோ வாகனம் மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பு
/
வீடியோ வாகனம் மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பு
ADDED : செப் 21, 2024 06:04 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி,கல்லுாரி மாணவர்கள்,பொதுமக்களிடையே மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனம் மூலம் போதை இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சியை உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் ஜெயின்பால்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் குறும்பட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.