/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
ADDED : அக் 01, 2024 05:26 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே மகாராஜா நகரில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
கலெக்டர் அலுவலகம் மகாராஜா நகரை சேர்ந்தவர் வினோதன் 35. வெளிநாட்டு தனியார் வங்கியில் சென்னை கிளையில் மேலாளராக பணியாற்றுகிறார். செப்.28ல் திண்டுக்கல்லில் வீட்டிற்கு வந்த அவர் குடும்பத்துடன் வடமதுரையில் உள்ள சொந்த ஊருக்கு சென்றார். வினோதன் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்தனர். நேற்று இரவு 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்த போது கதவுகள் திறக்கப்பட்டு பீரோவிலிருந்த பணம் கொள்ளை அடிக்க பட்டதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,பிரபாகரன் விசாரித்தார்.