sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

/

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை


ADDED : ஜூலை 23, 2011 09:44 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பட்டி : செம்பட்டி அருகே குளத்தில், வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இறந்தவர் குறித்தவிபரமும் தெரியவில்லை. போடிக்காமன்வாடி ஊராட்சியில் வாடிக்குளம் உள்ளது. இது நீரின்றி வறண்டுள்ளது. இங்கு கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிவந்த நிறமுடைய இவர் கட்டம் போட்ட வெள்ளை நிற கைலியும், டிசைன் போட்ட வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்துள்ளார். இடுப்பில் தாயத்துடன் கூடிய அரைஞாண் கயிறு உள்ளது. நேற்று முன் தினம் இரவு சம்பவ இடத்திற்கு, ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுடன் இவர் இங்கு வந்திருக்கலாம். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலையாளிகள் கத்தியால் கழுத்தை அறுத்து கொ ன்று விட்டு தப்பிசென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். புதர் மறைவில் பிணத்தை தூக்கி சென்று போட்ட கொலையாளிகள் எரிக்கவும் முயற்சித்துள்ளனர். கொலையுண்டவர் அணிந்திருந்த சட்டை காலரில் ரேமண்ட்ஸ் டெய்லர், சிபிடி என்ற லேபிள் இருந்தது. தேனியில் இருந்து மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டது. செம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us