/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உடைந்த டிபன் பாக்ஸ்; இழப்பீடு வழங்க உத்தரவு
/
உடைந்த டிபன் பாக்ஸ்; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 31, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :
திண்டுக்கல் பேகம்பூர் ஜமால் தெருவை சேர்ந்தவர் குமாஸ்தா சையது அப்துல்லா 50. திண்டுக்கல் சோலைஹால் சாலையில் உள்ள ஒரு கடையில் 2021 மார்ச்சில் ரூ.230க்கு சில்வர் டிபன் பாக்ஸ் வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது உடைந்திருப்பது தெரிந்தது. கடைக்காரர் மாற்றி தரமுடியாது என கூறினார். திண்டுக்கல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தொடுத்த வழக்கில் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம், டிபன் பாக்ஸ் தொகை ரூ.230 ஐ சேர்த்து ரூ.30,230 வழங்க நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பிறவிப்பெருமாள் உத்தரவிட்டார்.கடைநிறுவனத்தினர் மதுரை கமிஷனில் மேல்முறையீடு செய்தனர். விசாரித்த மதுரை கமிஷன் திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை இறுதிசெய்து தீர்ப்பளித்தது. அதன்பின்னும் இழப்பீடு வழங்க தாமதம் செய்தனர்.திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் சையது அப்துல்லா மீண்டும் மனு செய்தார்.இந்த மனு, நீதிபதி சித்ரா, உறுப்பினர் பாக்கியலட்சுமி அமர்வில் விசாரணைக்கு வர கடை நிறுவனத்தினர் இழப்பீடு தொகையை செலுத்தினர்.

