/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புகார் அளித்ததால் அண்ணனை வெட்டிய தம்பி
/
புகார் அளித்ததால் அண்ணனை வெட்டிய தம்பி
ADDED : நவ 18, 2025 04:29 AM
நத்தம்: -நத்தம் அருகே சொத்து சம்பந்தமான தகராறில் புகார் கொடுத்த அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நத்தம் அருகே சிறுகுடி-மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னாரான் 56.இவரது தம்பி பெரியையா 51. இவர்களுக்கு கொட்டாம்பட்டி அருகே தொந்திலிங்கபுரத்தில் பூர்வீக சொத்து உள்ளது. இந்நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தை, தம்பி பெரியையா அவரது பெயரில் பத்திர பதிவு செய்து கொண்டதாக சின்னாரான் நத்தம் போலீசில் புகார் செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த பெரியையா, அவரது மனைவி ராசாத்தி மற்றும் குடும்பத்தினர் சின்னாரானை அவரது வீட்டிற்கு சென்று அரிவாளால் வெட்டியும், கட்டையால் அடித்தும் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த சின்னாரான் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பெரியையா, அவரது மனைவி ராசாத்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நத்தம் போலீசார் விசாரிக் கின்றனர்.

