sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கோயில் சன்னதிகள் இடமாற்றம், இரவு பகலாக மது விற்பனை குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு

/

 கோயில் சன்னதிகள் இடமாற்றம், இரவு பகலாக மது விற்பனை குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு

 கோயில் சன்னதிகள் இடமாற்றம், இரவு பகலாக மது விற்பனை குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு

 கோயில் சன்னதிகள் இடமாற்றம், இரவு பகலாக மது விற்பனை குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு


ADDED : நவ 18, 2025 04:29 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கோயில் சன்னதிகள் இடமாற்றம், இரவு பகலாக மதுவிற்பனை, கழிப்பிடவசதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் பலர் முறையிட்டனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில்நேற்று நடந்தது. பொதுமக்களிடம் இருந்து 284 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.6.64 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை, கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 2பயனாளிகளுக்கு ரூ.4.10 லட்சம் மதிப்பிலான விபத்து மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, 5பயனாளிகளுக்கு ரூ.2.65 லட்சம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, 14பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, தாட்கோ மூலம் ஒருபயனாளிக்கு ரூ.3.25 லட்சம் மதிப்பில் ஆட்டோ உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைகலெக்டர் சரவணன் வழங்கினார்.

இதில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பயிற்சி கலெக்டர் ராஜேஸ்வரி சுவி, நேர்முக உதவியாளர்கள், கீர்த்தனா, செல்வன், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர்ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இரவு பகலாக மது விற்பனை தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் இரணியன் அளித்த மனு: சிறந்த சுற்றுலாத்தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கும் பழநி,கொடைக்கானல் நகரங்களில் விதிகளை மீறி முறைகேடாக மது விற்கப்படுவதால்மாணவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள், சிறுவர்கள்பாதிக்கப்படுகின்றனர். விபத்துகளும் நடக்கிறது.

எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்மதுக்கடைகளை மூடவேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுக்கழிப்பிடம் தேவை அய்யம்பாளையத்தை சேர்ந்த சிவமணி அளித்த மனு: பழநி, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் 200 அருந்ததியர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு பொதுக்கழிப்பிட வசதிஇல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவேபொதுக்கழிப்பிடம் கட்டித்தரவேண்டும்.

மிரட்டல் விடுக்கும் போலீசார் திண்டுக்கல் செண்பகராஜ் பாண்டியன் என்பவர் அளித்த மனு: திருவண்ணாமலைக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றிருந்தபோது, என் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீஸ் சிலர், பீரோவில்வைத்திருந்த 21 பவுன் நகை, கோயில் அன்னதானத்திற்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்தை எடுத்துவந்து விட்டனர்.

இதுகுறித்து கேட்டால் துப்பாக்கி, ஆயுதங்களால் தாக்குவதாக மிரட்டு கிறார்கள்.

இதுகுறித்து நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கோயில் சன்னதிகள் இடமாற்றம் தேனிமாவட்டம் சக்கம்பட்டியை சேர்ந்த ராஜா: 2016ல், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில்குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இதற்காக, ஆகம விதிப்படி இல்லாமல் கோயில் சாமி சன்னிதிகள்இடம் மாற்றிக் கட்டப்பட்டது. கோயில் சிலைகள் கடத்தி செல்லப்பட்டன. அவற்றை திரும்ப மீட்கநடவடிக்கை எடுக்கவேண்டும். ஆகம விதிப்படி சாமி சன்னதிகள் கட்டப்படவேண்டும்'.






      Dinamalar
      Follow us