
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையத்தில் பொங்கல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி போட்டி நடந்தது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாட்டுவண்டி பந்தயத்தை துவக்கி வைத்தார். பூஞ்சிட்டு, கரிச்சான், நடுமாடு, பெரிய மாடு ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. முதல் பரிசாக ரூ.30,000, ரூ.45000, ரூ.60,000, ரூ.1,00,000 ரொக்கம் வழங்கப்பட்டது. 2ம் பரிசாக ரூ. 25,000,ரூ.30000, ரூ.50000, ரூ.70,000 வழங்கப்பட்டது. 3ம் பரிசாக ரூ.20000,ரூ.25000,ரூ.40000,ரூ.50,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. வண்டிகளை ஒட்டிய சாரதி, துணை சாரதிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள்பங்கேற்றது.