/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓடை, வயல் வழியாக சென்று அடக்கம்
/
ஓடை, வயல் வழியாக சென்று அடக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:16 AM

கொடைரோடு : ஒருத்தட்டு கிராமத்தில் சுடுகாட்டிற்கு ரோடு வசதி இல்லாமல் ஓடை, வயல்வெளியில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலையை அதிகாரிகள் மாற்ற வேண்டும்.
பல்வேறு சமூகத்தினர் வசித்து வரும் இக்கிராமத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்ய முட்புதர்மண்டிய ஓடை வழியாக செல்லும் அவல நிலை உள்ளது.
ரோடு வசதி இல்லாததால் பட்டா நிலத்தின் வழியாக இறந்தவர் உடலை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி கூறுகையில்,'' ரோடு வசதி இல்லாததால் முட்புதர்சூழ்ந்த ஓடை , தனியார் பட்டா நிலத்தின் வழியாக செல்லும் நிலை உள்ளது.
மழைக்காலங்களில் ஓடை , விவசாய நிலத்திற்குள் செல்லும் அவல உள்ளது. மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டுக்கு என ரோடு அமைத்து தர வேண்டும் '' என்றார்.

