/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பையை எரிப்பதால் வெளியாகுது கரும்புகை; அறியாமை தவறால் சந்ததியினருக்கே பாதிப்பு

ADDED : மார் 01, 2024 12:15 AM

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவைகளிலிருந்து வெளிவரும் கரும்புகைகள் ஓசோன் படலத்திற்கு சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது.
இதுமட்டுமின்றி ரோட்டோரங்களில் மருத்துவ கழிவுகள்,குப்பை போன்றவற்றை கொட்டி எரிக்கின்றனர். அருகில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு விஷ புகைகள் காற்றில் பரவி மக்களுக்கு மூச்சித்திணறல்,சைனஸ் பிரச்னை போன்ற பல நோய்களை உருவாக்குகிறது.
வாகனங்களின் பயன்பாடுகளும் மக்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமாக இருப்பதால் அவைகளிலிருந்து வெளிவரும் புகையும் காற்றில் பரப்புகிறது.
இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் பல உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளது. மக்களே காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சித்திணறல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடக்கும் இதை சிலர் அறியாமையால் செய்து கொண்டிருக்கின்றனர்.
சிலர் தெரிந்தும் என்ன நடந்தால் நமக்கென்ன என்ற கோணத்தில் செய்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுகிறதா என்பதே மக்களுக்கு சந்தேகத்தை கிளப்புகிறது . துறை அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தினால் தான் வரும்கால சந்ததியினருக்கு சுத்தமான மூச்சு காற்றை நாம் விட்டு செல்ல முடியும். மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்னை மீது கவனம் செலுத்த வேண்டும்.