/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லாரி மீது மோதிய பஸ்; 20 பேர் காயம் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மீட்பு

ADDED : மார் 18, 2026 06:07 AM

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே லாரி மீது தனியார் பஸ் மோதியதில் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து கோவிலுார் வழியாக கரூருக்கு தனியார் பஸ் சென்றது. கடவூர் ரெட்டியபட்டியை சேர்ந்த டிரைவர் ஜெயசங்கர் 29,ஓட்டினார். 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்றபோது கனரக லாரி குறுக்காக வர அதன் மீது மோதியது. பஸ் சேதமடைந்த நிலையில் டிரைவர் ஜெய்சங்கரின் கால்கள் இடிபாடுகளில் சிக்கியது. மண் அள்ளும் இயந்திரம் கொண்டு டிரைவரை மீட்டனர்.
பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் குஜிலியம்பாறை, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.