/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேலை கொடுத்துட்டாங்க... பாவாடை என்னாச்சு...
/
சேலை கொடுத்துட்டாங்க... பாவாடை என்னாச்சு...
ADDED : மார் 18, 2026 06:21 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தி.மு.க., அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், 'சேலை கொடுத்திட்டாங்க... பாவாடை என்னாச்சு' என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திண்டுக்கல்லில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தி.மு.க.வினர் பணத்தை வைத்து வீழ்த்திவிடலாம் என நினைக்கிறார்கள். ரூ.100 மதிப்புள்ள ஹாட்பாக்ஸ், சேலை கொடுத்துள்ளனர். பாவாடை இல்லாமல் எப்படி சேலை கட்டுவது என பெண்களெல்லாம் கேட்கிறார்கள். மக்கள் பணத்தை எடுத்து தமிழகம் முழுவதும் இதுபோல் கேவலப்படுத்தியவர்கள் ஆட்சி இருக்க வேண்டுமா என சிந்தித்து பார்க்கவேண்டும் '' என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த மகளிர் அணியினர் வாய்விட்டு சிரித்த நிலையில் கட்சியின் ஐ.டி., பிரிவினரோ 'ஏற்கனவே நயன்தாரா பற்றி சி.வி.சண்முகம் பேசியது சிக்கலாகி இருக்கு.... இதில் இவர் வேற அநியாயத்துக்கு உளறுகிறாரே.., ஒரு நாளைக்கு ஒரு பிரச்னை என்றால் சமாளிக்கலாம் எல்லாம் பிரச்னைனா எப்படியா சமாளிக்கிறது.
மொத்தத்தில் நமக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன் என பேசிக்கொண்டனர்.

