/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலை ரோட்டில் மரம் விழுந்ததில் பஸ் சேதம்
/
மலை ரோட்டில் மரம் விழுந்ததில் பஸ் சேதம்
ADDED : ஆக 13, 2025 02:15 AM
தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோட்டோரம் ஏராளமான மரங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.சமீபத்தில் தாண்டிக்குடி, ஆடலுார், பன்றிமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு புதிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.பஸ்களை சேதப்படுத்தும் வகையில் ரோட்டோரம் மரக்கிளைகள் தொங்கிய படியும், சாய்ந்த நிலையிலும் உள்ளது.
இவற்றை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்த போதும் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. நேற்று காலை வத்தலக்குண்டிலிருந்து தாண்டிக்குடி சென்ற அரசு பஸ் மீது சாய்ந்த நிலையில் இருந்த ஆலமரம் விழுந்தது. இதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது. மலைப் பகுதிகளில் ரோட்டோரம் விபத்தை ஏற்படுத்தும் மரங்களை அகற்ற இனியாவது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.