/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
ADDED : பிப் 12, 2026 04:54 AM
ஒட்டன்சத்திரம்: கேரளாவில் 'ஸ்டிரைக்' எதிரொலியாக, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், 2.5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் விளைந்த காய்கறிகளும் விற்பனைக்கு வருகின்றன. கேரள வியாபாரிகள், 70 சதவீதத்திற்கும் அதிகமான காய்கறிகளை, இந்த மார்க்கெட்டில் கொள்முதல் செய்கின்றனர்.
இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து, விவசாயிகள் சங்கம், அகில இந்திய அளவில், இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
கேரளாவில், ஸ்டிரைக் நடக்கும் நாளுக்கு முதல் நாள், காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்வது இல்லை. அதன்படி, கேரள வியாபாரிகள் நேற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளை கொள்முதல் செய்ய வரவில்லை.இதனால், மார்க்கெட் வெறிச்சோடி, 2.5 கோடி ரூபாய் அளவிற்கு, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.