/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு
/
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு
ADDED : பிப் 12, 2026 04:54 AM
சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்.,17 வரை பூஜைகள் நடைபெறுகிறது
மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து ஜன.,20- காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5:00 மணிக்கு, மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். இன்று வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் 5:30 மணிக்கு நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து வழக்கமான கணபதி ஹோமம், உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை நடைபெறும்.
நாளை முதல் பிப்.,17 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். 17-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். கேரளாவில் இன்று வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தினாலும் சபரிமலை வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

