/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்வேலியில் சிக்கி வியாபாரி பலி
/
மின்வேலியில் சிக்கி வியாபாரி பலி
ADDED : டிச 02, 2024 04:25 AM
கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே அனுமதியற்ற மின்வேலியில் சிக்கி ஆட்டை தேடி சென்ற வியாபாரி பலியானார்.
கரிசல்பட்டி பழையகன்னிவாடியை சேர்ந்த ஆட்டு வியாபாரி குமார் 43. இவர் 2 நாட்களுக்கு முன் செம்பட்டி சந்தையில் ஆடுகள் வாங்கினார். இவரது ஆட்டு மந்தையில் ஒரு ஆடு நேற்று முன்தினம் மாலையில் காணவில்லை.
இதை தேடும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டபோது தருமத்துப்பட்டி கோம்பை முருகானந்தம் என்பவரது தோட்டத்தின் அருகே குமார் வந்தார். அப்போது அங்கிருந்த மின்வேலியில் சிக்கி இறந்தார்.
கன்னிவாடி போலீசார் கூறுகையில் 'முருகானந்தம் தோட்டத்தில் யானை, காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இவற்றை கட்டுப்படுத்த அனுமதியின்றி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கி குமார் இறந்தார் 'என்றனர்.