/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பைபாஸ் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
/
பைபாஸ் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
ADDED : பிப் 18, 2025 05:26 AM
ஒட்டன்சத்திரம்: தினமலர் செய்தி எதிரொலியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்களே அகற்றினர்.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் இருந்து மார்க்கெட்டிற்கு பைபாஸ் ரோடு செல்கிறது.
ரோட்டில் இரண்டு பக்கங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதாக தினமலர் நாளிதழ் பிரச்னையும் தீர்வும் பகுதியில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து ரோட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த வர்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டன. மேற்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி ரோடு போட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

