பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: இருவர் கைது
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: இருவர் கைது
ADDED : ஆக 05, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுகுடியை சேர்ந்த பிரதீப் 27, தனது பிறந்த நாளான ஆக.,1 இரவு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் 25, மற்றும் 15க்கும் மேற்பட்ட சிறுவர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார்.
இது தொடர்பான வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதுகுறித்த புகாரில் விசாரித்த நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் அதே பகுதியில் பதுங்கியிருந்த பிரதீப், சந்தோைஷ கைது செய்தனர்.
இதுபோன்ற சட்டவிரோத, அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜெயக் குமார் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
