ADDED : மார் 29, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட டிஐசிசிஐ ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் அறிக்கை: தமிழ்நாடு அரசின் தாட்கோ திட்டத்தில் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் , திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் சிட்கோ பகுதியில் ஆதிதிராவிடர், பழங்குடி இன தொழில் முனைவோருக்காக தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொழிற் பேட்டையில் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்காக இங்குள்ள கட்டடம் வாடகைக்கும், ஒத்திக்கும் தாட்கோ வழங்குகிறது.
இது தொடர்பான ஆலோசனைக்கு தாட்கோ மேலாண்மை இயக்குனரை ஏப்ரல் 4ம் தேதி ஆதிதிராவிடர் ,பழங்குடி இன வர்த்தக தொழில் கூட்டமைப்பு அமைப்பு வாயிலாக சந்திக்கலாம். ஆர்வமுள்ள தொழிற் முனைவோர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 94865 02779 ல் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.