தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஜெருசலேம் புனித பயண மானியம் பெற அழைப்பு

ஜெருசலேம் புனித பயண மானியம் பெற அழைப்பு

ஜெருசலேம் புனித பயண மானியம் பெற அழைப்பு


UPDATED : நவ 18, 2026 09:22 PM

ADDED : நவ 18, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 09:22 PM ADDED : நவ 18, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழகத்தில் வசிக்கும் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களில் நபர் ஒருவருக்கு ரூ.37 ஆயிரம் வீதமும், 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே நடப்பாண்டில் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2027 ஜன.,31க்குள் உரிய ஆவணங்களுடன் கமிஷனர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us