UPDATED : நவ 18, 2026 07:36 PM
ADDED : நவ 18, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த காய்கறி சாகுபடி குறித்து ஆதிதிராவிட விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் பூண்டியில் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் ஸ்வர்ணலதா, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் சுந்தரய்யா, தோட்டக்கலை அலுவலர் வெற்றிவேல் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர் கார்த்திகேயன் செய்தார்.
விளை நிலங்களை காப்பது, இயற்கை வழியில் வேளாண்மை செய்வது, பயிர்களில் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மண் மாதிரி எடுத்தல், மண்வளம் பாதுகாத்தல், தோட்டக்கலைத்துறை திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
