தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஜெருசலேம் புனித பயண மானியம் பெற அழைப்பு

 ஜெருசலேம் புனித பயண மானியம் பெற அழைப்பு

 ஜெருசலேம் புனித பயண மானியம் பெற அழைப்பு


ADDED : டிச 18, 2025 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழகத்தை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரம், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. நவ.1க்கு பின் ஜெருசலேம் பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகள் இ.சி.எஸ்., முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www. bcmbcmw.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச.28க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 முவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us