ADDED : ஜூலை 11, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: தனியார் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, கடன் உதவி உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டாரத் தலைவர்கள் சதீஷ், பகவான் பங்கேற்றனர்.