/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓய்ந்தது பிரசாரம் ;- இறுதி கட்டத்தில் வேட்பாளர்கள்
/
ஓய்ந்தது பிரசாரம் ;- இறுதி கட்டத்தில் வேட்பாளர்கள்
ஓய்ந்தது பிரசாரம் ;- இறுதி கட்டத்தில் வேட்பாளர்கள்
ஓய்ந்தது பிரசாரம் ;- இறுதி கட்டத்தில் வேட்பாளர்கள்
ADDED : ஏப் 18, 2024 05:43 AM

திண்டுக்கல்: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியோடு முடிந்த நிலையில் வேட்பாளர்கள்,அரசியல் கட்சியினர் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டினர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிபு மார்ச் 16 ல் வெளியானது. அதன்படி ஓட்டுப்பதிவு ஏப். 19, ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4 ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 20 ல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 27ல் நிறைவடைந்தது.
திண்டுக்கல் தொகுதியில் பிரதான கட்சிகள், சுயேட்சைகள் என 15 பேர் போட்டியிடுகின்றனர். பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா, தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம், அ.தி.மு.க., கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக், நாம் தமிழர் சார்பில் கயிலை ராஜன் களத்தில் உள்ளனர்.
மார்ச் 20 முதலே பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தொடங்கிய நிலையில் வாகன பிரசாரம், பொதுக்கூட்டம், அரசியல் தலைவர்கள் பிரசாரம் நடந்தது.
இப்பிரசாரம் நேற்று மாலை 6 :00 மணியோடு நிறைவடைந்தது. நேற்று காலை முதலே வேட்பாளர்கள் தங்களின் இறுதி கட்ட பிரசாரத்தை தொடங்கினர்.
பா.ம.க., வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல் நகர் மேட்டுப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கி முத்தழகுபட்டி, ரவுண்ட்ரோடு என நகர் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் நிலக்கோட்டையில் தொடங்கி தன் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
திலகபாமா பேசியதாவது: ஓட்டிற்கு பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால், நான் எண்ணிலடங்கா மக்களை சம்பாரித்திருக்கிறேன்.
திண்டுக்கல் மண்ணின் புதல்வியான நான் தொகுதிக்கு தேவையான விஷயங்கள் செய்து கொடுக்க முதல் குரலாய் ஒலிப்பேன். தி.மு.க., அ.தி.மு.க., என இரு கட்சிகளும் நாட்டை நாசமாக்குகின்றன.
ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் தொகுதியை சிறந்ததாக மாற்றிக் காட்டுவோம் என்றார்.
திண்டுக்கல் மா.கம்யூ.,வேட்பாளர் சச்சிதானந்தம் பழநி, கன்னிவாடி, வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி,திண்டுக்கல் பகுதியில் பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியிலிருந்து தொண்டர்களுடன் டூவீலர்களில் ஊர்வலமாக சென்று நாகல்நகரில் பிரசாரத்தை முடித்தார். வேட்பாளர் சச்சிதானந்தம் பேசியதாவது:
மார்ச் 22லிருந்து நேற்று வரை 24 நாட்களாக அனைத்து தொண்டர்களும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக பணியாற்றினர். மக்கள் எல்லா இடங்களிலும் அமோகமாக வரவேற்பு கொடுத்தனர். தேர்தல் பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியாக இருந்தது என்றார்.
எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் திண்டுக்கல் நகர் முழுவதும் தெரு வாரியாக பிரசாரம் மேற்கொண்ட அவர் மாலையில் மதுரை ரோட்டில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
முகமது முபாரக் பேசியதாவது: நாங்கள் வெற்றி பெற்றால் இந்தியாவிலே சிறந்த தொகுதியாக திண்டுக்கலை மாற்றி விடுவோம்.
இங்கேயே தங்கியிருந்து மக்களில் ஒருவனாய் மக்கள் பணியாற்றுவேன். ஊராட்சி வாரியாக மக்கள் தொடர்பு மையங்களை உருவாக்கி நேரடியாக மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை தீர்ப்பேன் என்றார்.
நாம் தமிழர் கட்சி கயிலை ராஜன் : திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் இறுதி நாள் தேர்தல் பிரசாரத்தை பழநியில் தொடங்கி ஒட்டன்சத்திரம், ஆத்துார், திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட், நாகல்நகர் என என்.ஜி.ஓ.காலனியில் நிறைவு செய்தார்.
வேட்பாளர் கயிலை ராஜன் பேசியதாவது: விவசாயிகளை இடைத்தரகர்கள், வணிகர்களிடம் இருந்து மீட்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்.
அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

