/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுப்படுத்தலாமே: எங்கும் தாராளமாக புழங்கும் தடை பிளாஸ்டிக்: அதிகாரிகள் கண்டுக்காததால் உற்பத்தியும் ஜோர்

ADDED : டிச 17, 2024 04:26 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் தடை பிளாஸ்டிக் எங்கும் தாராளமாக புழங்கும் நிலையில் இதன் பயன்பாட்டை குறைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஏராளமான கடைகளில் தடை பிளாஸ்டிக் கவர்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகள் , தள்ளுவண்டி கடைகள், திடீரென உருவாகும் ஓட்டல்களில் தடை பிளாஸ்டி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் எங்கும் தாராளமாக புழங்கும் நிலையில் நகர்,கிராமம் எங்கும் பிளாஸ்டிக் குப்பை அதிகரிக்கிறது. இதன் குப்பையை அப்புறப்படுத்துவதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இருந்தாலும் ரோடுகள் எங்கும் கிடைக்கின்றன. சாக்கடைகளில் நிரம்பி வழிவதால் கழிவு நீர் செல்வதில் பிரச்னைகள் ஏற்படுகிறது . கொசு உற்பத்திக்கும் இடமளிக்கிறது . காற்றில் விவசாய நிலங்களுக்கு அடித்து வருவதால் நிலத்தடி நீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது .விவசாயி களும் பாதிப்பினை சந்திக்கின்றனர் . டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களின் சூடாக டீ , பால் ஊற்றி தரப்படுவதால் நோய் அபாயமும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் துறை அதிகாரிகள் எதையும் கண்டுக்காததால் இதன் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது .தடை பிளாஸ்டிக்கை கடைகளில் பயன்படுத்துவதை தடுப்பது மட்டுமன்றி இதன் உற்பத்தி மையங்களை கண்டறிந்து முழுமையாக ஒழித்தாலே இதற்கு தீர்வு கிட்டும் .
........
உறுதியேற்க வேண்டும்
பழநி நகரில் அதிக அளவில் தடை பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் தேவை. உள்ளூர் கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து தடை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் .
வெங்கடேஷ், வியாபாரி ,நெய்க்காரப்பட்டி.