/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோரங்களில் அதிகரிக்கும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றலாமே ; வாகன ஓட்டிகள் கவனம் சிதறுவதால் விபத்துக்கள்

ADDED : ஆக 25, 2025 02:32 AM

மாவட்டத்தில் நான்கு வழி சாலை,நெடுஞ் சாலைகள், கிராம ரோடுகள் என அனைத்து ரோட் டோரங்கள், தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களால் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. சில இடங்களில் இருந்த மெகா விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.
இருந்த போதும் பல இடங்களில் விளம்பர பேனர்கள் அகற்றப்படாததால் அவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விளம்பர பேனர்களை முறையாக பராமரிப்பது இல்லை. அவை சேதமடைந்து கிழிந்து காற்றில் பறப்பதால் ரோடுகளில் செல்லும் வாகனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இதுபோல் வாகனஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்களும் ஏற்படுகின்றன. இது போன்ற விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை மீது கவனம் செலுத்த வேண்டும்.