/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை த.மா.கா., தலைவர் வாசன் பேச்சு
/
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை த.மா.கா., தலைவர் வாசன் பேச்சு
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை த.மா.கா., தலைவர் வாசன் பேச்சு
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை த.மா.கா., தலைவர் வாசன் பேச்சு
ADDED : ஆக 25, 2025 01:33 AM
திண்டுக்கல்: ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை''என த.மா.கா., தலைவர் வாசன் பேசினார்.
திண்டுக்கல்லில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் ஆட்சிமாற்றம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதற்கு அடித்தளமாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் கள மானது வளமான தமிழகம் வலிமையான பாரதம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பொருளாதார ரீதியாக உயர்வான நாடாக இருக்கிறது.
எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கக்கூடிய எடுத்துக்காட்டாக ஆப்பரேஷன் சிந்துார் இருக்கிறது.
மத்திய அரசு அப்படி ஆட்சி பீடத்தை அமைத்து கொண்டிருக்கிறது என்றால் மாநிலத்திலே வளமான தமிழகம் தேவை.
அதற்கு இங்கு ஆட்சி மாற்றம் தேவை.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவம் போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய தகுதி இல்லாத அரசாக இன்றைய அரசு இருக்கிறது.
வருங்காலம் நம் காலமாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., தலைமையில் ஒற்றை கருத்து உள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெற்றியை உறுதி கொள்ள வேண்டும் என்றார்.