/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை புற்றுநோய் பரிசோதனை முகாம்
/
நாளை புற்றுநோய் பரிசோதனை முகாம்
ADDED : பிப் 14, 2026 07:25 AM
திண்டுக்கல்: கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பழநி பஸ் ஸ்டாண்ட் காந்தி ரோட்டில் அருகில் அமைந்துள்ள ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நாளை (பிப்.15 )காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடக்க உள்ளது.
முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கர்ப்பப்பை வாய் பரிசோதனை (பாப் ஸ்மியர்) ஆகிய பரிசோதனைகள், டாக்டரின் பரிந்துரைப்படி இலவசமாக செய்யப்படும்.
இம்முகாமில் நாள்பட்ட மாதவிடாய் தொந்தரவு, மார்பில் கட்டி, மார்பில் வலி, அதிகமான ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், இயற்கை உபாதை கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் (மலச்சிக்கல் ,வயிற்றுப்போக்கு), பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம், வலி, கல்லீரல் , கணையப் புற்றுநோய், அடி வயிற்றில் கட்டி, குரலில் திடீர் மாற்றம், திடீர் எடை குறைவு, ஆறாத வாய்ப்புண், கழுத்தில் வீக்கம், கட்டி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம். டாக்டர் பரிந்துரைக்கப்படும் இதர பரிசோதனைகள், சிகிச்சைகள் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். இந்த இலவச மருத்துவ ஆலோசனை முகாமிற்கு பழைய மருத்துவ பரிசோதனை பதிவு ஆவணங்களையும், எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்து ரசீதுகளையும் எடுத்துவர வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 74188 87411 ல் அழைக்கலாம்.

