நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஆர்.ஹெச்., காலனி விநாயகர் கோயிலில் மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. கோயிலில் பூஜை நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமானோர் பங்கு பெற்றனர். அனைவருக்கும்,கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், அவரது மனைவி தாமரைச்செல்வி அனைவருக்கும் போர்வைகள் வழங்கினர்.
இதில் தி.மு.க., தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ரவிசங்கர், மருதபிள்ளை, மணிமாறன், சுப்பிரமணி, சரவணன் பங்கேற்றனர்.

